Home உலகம் இளவரசர் சார்லசிடம் பொறுப்பை ஒப்படைக்க எலிசபெத் ராணி முடிவு!

இளவரசர் சார்லசிடம் பொறுப்பை ஒப்படைக்க எலிசபெத் ராணி முடிவு!

607
0
SHARE
Ad

prince-charlesx

லண்டன், ஜன 21- இங்கிலாந்து ராணி எலிசபெத் தன்னுடைய பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இளவரசர் சார்லசிடம் ஒப்படைத்து வருகிறார்.

பிரிட்டிஷ் அரசி, இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அரசி மற்றும் மன்னர்கள் தங்கள் வாரிசிடம் பொறுப்பை ஒப்படைத்து உள்ளனர். ஆனால், பிரிட்டிஷ் அரசர் சார்லஸ், 65, தன் தாயிடம் இருந்து மன்னர் பொறுப்பை எதிர்ப்பார்த்து சோர்ந்து போய் விட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் 87 வயதாகும் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லசின் பத்திரிகை அலுவலகங்கள் சமீபத்தில் இணைக்கப் பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இளவரசர் சார்லஸ் அரசராகும் அறிகுறி என்று கருதப்படுகிறது.

சமீபத்தில், நார்மண்டி கடற்கரையில் நடந்த ராணுவ விழாவில் இளவரசர் சார்லசும் அரசி எலிசபெத்தும் ஒன்றாக கலந்து கொண்டனர். ‘இந்த நிகழ்ச்சி, வரும் ஜூன் 6ம் தேதி முதல் இளவரசர் தன் தாயுடன் இணைந்து அதிகாரப்பூர்வமான பணிகளை கவனிப்பதற்கான முன்னோட்டம்’ என, ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டு உள்ளது.