Home நாடு பிகேஎன்எஸ் உயர் அதிகாரிகள் நீக்கம்!

பிகேஎன்எஸ் உயர் அதிகாரிகள் நீக்கம்!

716
0
SHARE
Ad

pkns1 (1)பெட்டாலிங் ஜெயா, ஜன 21 – பி.கே.என்.எஸ் எனப்படும் சிலாங்கூர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் வாரியத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தலைமை நிர்வாகி டத்தோ ஒஸ்மான் ஓமார் மற்றும் நிர்வாகச் செயலாளர் நோரிதா முகமட் சீடெக் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு அதிகாரிகளும் பொதுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே பிகேஆர் தலைமைத்துவத்தின் நெருக்குதல் காரணமாக அஸ்மின் அலியை மீண்டும் வாரிய உறுப்பினர் பதவியில் அமர்த்தும் கடிதம் ஒன்று அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice