Home நாடு பிகேஎன்எஸ் உறுப்பினராக அஸ்மின் மீண்டும் நியமனம்!

பிகேஎன்எஸ் உறுப்பினராக அஸ்மின் மீண்டும் நியமனம்!

674
0
SHARE
Ad

azmin-aliபெட்டாலிங் ஜெயா, ஜன 21 – பிகேஎன்எஸ் என்று அழைக்கப்படும் சிலாங்கூர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் வாரிய உறுப்பினராக பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அஸ்மின், ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அதற்கான கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அஸ்மினின் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு மாநில அரசாங்கம் ஆட்சேபணை தெரிவித்ததாகவும், ஆனால் மந்திரி பெசார் அலுவலகம் அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென பணித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கும், அஸ்மினுக்கும் இடையிலான அதிகார பலப் பரீட்சையாக இம்மோதல் அமைந்துள்ளது என்று அம்மாநில வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது.

அஸ்மின் பதவி நீக்கம் செய்யப்பட்டதை பிகேஆர் தலைமைத்துவம் ஏற்கவில்லை. அவரை மீண்டும் வாரிய உறுப்பினராக்கும் படி காலிட்டுக்கு உத்தரவிட்டது.