Home நாடு அஸ்மின் நீக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் – காலிட்

அஸ்மின் நீக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் – காலிட்

514
0
SHARE
Ad

khalid-ib-jun20கிள்ளான், ஜன 21 – பி.கே.என்.எஸ் எனப்படும் சிலாங்கூர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் வாரியத்தில் இருந்து அஸ்மின் அலி நீக்கப்பட்டது குறித்து அனைத்துலக வெளிப்படை அமைப்பும், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் கூறியுள்ளார்.

பிகேஎன்எஸ் – ன் தலைமை நிர்வாகி டத்தோ ஒஸ்மான் ஓமார் மற்றும் நிர்வாகச் செயலாளர் நோரிதா முகமட் சீடெக் ஆகிய இருவரும் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும் இந்த இரு அமைப்புகளும் விசாரணை நடத்தவுள்ளதாகவும், அதுவரை வீணான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் பலிகடாவாக ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்று கூறப்படுவதை காலிட் திட்டவட்டமாக மறுத்தார்.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தில் முதலில் முழு விசாரணை நடக்கட்டும். பின்பு அவர்களே முழு அறிக்கையையும் வெளியிடுவார்கள். அதுவரையில் எந்த ஒரு வதந்தியும் வேண்டாம்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.