Home கலை உலகம் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

768
0
SHARE
Ad

SS-Rajendran (1)

சென்னை, ஜன 22- தமிழ் திரையுலகில் 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். பராசக்தி, மனோகரா, ரத்த கண்ணீர், சிவகங்கை சீமை, தெய்வபிறவி, குமுதம், ஆலயமணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் கதாநாயகனாக நடித்து வந்தார்.

86 வயதான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது. வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரால் சாப்பிட முடியவில்லை. எனவே, திரவ உணவே செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார் இவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.