Home கலை உலகம் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

760
0
SHARE
Ad

Rajendran-SS-300-x-200சென்னை, அக்டோபர் 24 – பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை.

அரசியல் அரங்கில் நுழைந்து சாதித்துக் காட்டிய திரைத்துறை கலைஞர்களில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்., ஆகியோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருடனும் இணைந்தும், தனிக் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்த இவருக்கு இலட்சிய நடிகர் என்ற பட்டமும் உண்டு.

#TamilSchoolmychoice

கடந்த 1947ஆம் ஆண்டு வெளிவந்த ‘பைத்தியக்காரன்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ‘பூம்புகார்’, ‘முதலாளி’, ‘மறக்க முடியுமா’ உள்பட, ரசிகர்களால் மறக்க முடியாத பல படைப்புகளில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் முதன் முதலாக தோன்றிய பராசக்தி படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் ராஜேந்திரன்.

தமிழ் மொழியை பிசகின்றி, அழகான நடையில், கம்பீரமான குரலில் உச்சரிக்கும் நடிகராக பவனி வந்தவர் ராஜேந்திரன்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றிருந்த அவர், தற்போது சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.