Home நாடு லாகாட் டாத்துவின் காணாமல் போன இத்தாலியர் பிலிப்பைன்சில் விடுமுறை – காவல் துறை கண்டுபிடிப்பு

லாகாட் டாத்துவின் காணாமல் போன இத்தாலியர் பிலிப்பைன்சில் விடுமுறை – காவல் துறை கண்டுபிடிப்பு

681
0
SHARE
Ad

கோத்தா கினபாலு, அக்டோபர் 23 – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வில்லியம் போச்சி என்ற பெயர் கொண்ட இத்தாலிய வர்த்தகர் தென் பிலிப்பைன்சில் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

Lahad Datu Location Map

52 வயதான போச்சி, பிலிப்பைன்சைச் சேர்ந்த டனிகா ஜோய் பயணப் படகு ஒன்றில் அக்டோபர் 14ஆம் தேதி சண்டகானிலிருந்து பயணித்தார் என்றும் சம்போங்கா என்ற நகர் நோக்கி சென்றார் என்றும் மாநில காவல் துறை ஆணையர் டத்தோ ஜலாலுடின் அப்துல் ரஹ்மான் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அங்கு அவர் சுற்றுப் பயணத்திற்காக சென்றுள்ளதால், இந்த விவகாரம் இத்துடன் ஒரு முடிவுக்கு வருவதாகவும் ஜலாலுடின் தெரிவித்தார்.

லகாட் டாத்து வர்த்தகரான சியா யிக் ஹூவான் என்பவர் அக்டோபர் 20 முதல் வில்லியம் போச்சி காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். கோலாலம்பூரில் உள்ள தனது நண்பர் ஒருவர் மூலம் போச்சி காணாமல் போனதாக ஃபேபியோ என்பவரிடமிருந்து தகவல் வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த அக்டோபர் 12இல் கோலாலம்பூர் வந்தடைந்த போச்சி பின்னர் கோத்தா கினபாலு சென்று அங்கிருந்து மறுநாள் விமானம் மூலம் லகாட் டத்து சென்றடைந்தார்.

அக்டோபர் 16ஆம் தேதி நாடு திரும்ப வேண்டிய அவர் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என காவல் துறையில் புகார் செய்யப்பட்டது.