Home வாழ் நலம் பலாப்பழம் நரம்புகளை உறுதியாக்கும்

பலாப்பழம் நரம்புகளை உறுதியாக்கும்

535
0
SHARE
Ad

jack_fruit_002

கோலாலம்பூர், ஜன 23- முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.

இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி , தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

#TamilSchoolmychoice

1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும்.

5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

6. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

7. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

8. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

9. பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.