கோலாலம்பூர், ஜன 23 – புலாபோல் காவல்துறை பயிற்சி மையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக பிகேஆர் உதவித்தலைவர் தியான் சுவாவிற்கு ஒரு மாத சிறை தண்டனையும், 1000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் இடங்கள் சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலேசிய அரசியலமைப்பின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பவர் 1 வருடத்திற்கு மேல் அல்லது 2000 ரிங்கிட்டிற்கு மேல் அபராதம் செலுத்தினால் அவரது பதவி பறிக்கப்பட்டு, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.