நியூயார்க், ஜன 23- கடந்த ஆண்டு சர்வ தேச அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்திருந்தது. இதற்கான காரணம் ஆய்வு செய்யப்பட்டப்போது, வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் ஆப்பிள் ஐபோன் வடிமைப்பு இல்லை, அதன் திரை சிறியதாக இருக்கிறது என்றும் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை அளித்திருந்தனர்.
எனவே, ஆப்பிள் நிறுவனம் தனது செல்பேசி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய திறன்பேசிகளையும் ஐபோன்களையும் உலக சந்தையில் வலம் வர செய்தது.
இந்நிலையில், 2012 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஐபோன்களின் விற்பனை உலக சந்தைகளில் அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன்கள் 47.8மில்லியன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது . ஆனால், அதனை காட்டிலும் 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஆப்பிள் ஐபோன் 55.3 மில்லியன் விற்பனையாகி உள்ளது என்று போர்பஸ் நடத்திய ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.