Home கலை உலகம் நாகேஸ்வர ராவ் உடலுக்கு இறுதி சடங்கு

நாகேஸ்வர ராவ் உடலுக்கு இறுதி சடங்கு

853
0
SHARE
Ad

nageswara rao

சென்னை, ஜன 23- நாகேஸ்வரராவ் உடலுக்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது.

தமிழ், தெலுங்கில் 1953–ல் வெளியான தேவதாஸ் படத்தில் நடித்து புகழ்பெற்ற நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தியில் 256 படங்களில் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மறைந்த அவரின் உடலுக்கு, நடிகர்கள் பலர் நேரில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாகேஸ்வர ராவ் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்குகள் நடக்கின்றன. அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

,

இவரின் மறைவையொட்டி தெலுங்கு படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள். ஊர்வலம் செல்லும் பாதையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு, ராஜேந்திர பிரசாத், ரவிதேஜா, பிரபு, வெங்கடேஷ், ராணா, ராம்சரண் தேஜா, பழைய நடிகைகள் வாணிஸ்ரீ, ஜமுனா, மற்றும் அனுஷ்கா, ரோஜா உள்பட பலர் அவரின் இறுதி சடங்கில் கலந்துக் கொண்டுள்ளனர்.