Home கலை உலகம் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய்

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய்

566
0
SHARE
Ad

aishwarya

சென்னை, ஜன 23- மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறாராம் .

மகள் ஆரத்யா பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமல் இருந்தார் ஜஸ்வர்யா.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் சில வெளிவந்தன.

ஆனால் அது உண்மையில்லை என்று உறுதியானது, அவ்வகையில்  தற்போது மேலும் ஒரு தகவல் காற்று வழியாக கசிந்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் ஐஸ்வர்யாராயை சந்தித்து கதை சொல்லி உள்ளார், இதில் மணிரத்னம் சொன்ன கதை பிடித்துப்போகவே நடிப்பதற்கு முடிவு செய்துள்ளாராம் ஐஸ்வர்யா.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கதாநயாகனாக நடிக்கிறார். நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில்  தயாராகும் என தெரிகிறது.