Home கலை உலகம் எஸ்.எஸ்.ஆர். உடல் நலம் தேறி வருகின்றார்!

எஸ்.எஸ்.ஆர். உடல் நலம் தேறி வருகின்றார்!

483
0
SHARE
Ad

Rajendran-SS-300-x-200சென்னை, ஜனவரி 23 – உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தற்போது உடல் நலம் தேறிவருவதாக அவரது 31 ஆண்டுகால மலேசிய நண்பர் கே.ஏ.குணா தெரிவித்துள்ளார்.

ம.இ.காவின் சமூக நல வியூக அறவாரியத்தின் ஓர் அதிகாரியான கே.ஏ.குணா, பத்திரிக்கைகளின் வழியும் தனது முகநூல் பக்கத்தின் மூலமாகவும் தெரிவித்துள்ள தகவலின்படி தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டதாகவும், அவர் தன்னிடம் பேசியதாகவும், தற்போது தனது உடல்நலம் தேறி வருவதாக அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் வழங்கிய தகவல்கள் இன்றைய மலேசிய நண்பன் மற்றும் தமிழ் நேசன் பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

1983ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நடிகர் ராஜேந்திரனைத் தான் அழைத்து வந்ததையும் கே.ஏ.குணா நினைவு கூர்ந்தார்.

1952ஆம் ஆண்டில் வெளிவந்து, பகுத்தறிவு விவாதக் கருத்துக்களால் தமிழ் நாட்டையே ஓர் உலுக்கு உலுக்கி, சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும் தமிழுலகிற்குத் தந்த பராசக்தி என்ற படத்தில்தான் முதன் முதலாக எஸ்.எஸ்.ராஜேந்திரனும் அறிமுகமானார்.

அவருக்கு தற்போது வயது 86.