Home நாடு சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசாராக அன்வார் நியமிக்கப்படுவரா ?

சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசாராக அன்வார் நியமிக்கப்படுவரா ?

539
0
SHARE
Ad

anwar

பெட்டாலிங் ஜெயா, ஜன 27- சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கும் மாநில பிகேஆர் தலைவர் அஸ்மின் அலிக்குமிடையே நிலவி வரும் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இதன் புதிய மந்திரி புசாராக அன்வாரை நியமிப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பிரபல இணையதள பதிவேட்டாளரான ராஜா பெட்ரா கமாருடின் தி மலேசிய டூடே இணையதளத்திடம் தெரிவித்தார்.

“காலிட்டை நீக்கி அவருக்குப் பதிலாக அஸ்மினை நியமிப்பது சாத்தியமில்லை. மேலும், காலிட்டை பதவியில் இருந்து நீக்கிவிட்டால் சிலாங்கூர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் போய்விடும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு ஒரே வழி அன்வார் மந்திரி புசார் ஆவதுதான் .

#TamilSchoolmychoice

இவ்விவகாரம் தொடர்பாக தற்போது பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அன்வார் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதில் ஜசெக இணக்கம் தெரிவித்து விட்டதாகக் கூறப்படும் வேளையில் இதனை பாஸ் எந்த வகையில் ஏற்றுக் கொள்ளும் என்பது தெரியவில்லை என்றார் ராஜா பெட்ரா.

ஆனால், இவ்விவகாரம் குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து மெளனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.