Home நாடு கடிதம் கிடைத்த பின்னர் காஜாங் இடைத்தேர்தல் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

கடிதம் கிடைத்த பின்னர் காஜாங் இடைத்தேர்தல் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

604
0
SHARE
Ad

abdul-aziz-yusof3-aug25கோலாலம்பூர், ஜன 28 – காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செவின் ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையம் இன்னும் பெறவில்லை என்றும், கடிதம் கிடைத்தவுடன் இடைத்தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் யூசோப் அறிவித்துள்ளார்.

“கடிதம் கிடைத்தவுடன் அது குறித்து விவாதித்துவிட்டு பின்னரே இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய முடியும். பேராக் மாநிலத்தில் நடந்ததை போன்று இன்னொரு சம்பவம் நடைபெறுவதை ஆணையம் விரும்பவில்லை” என்று அஸீஸ் குறிப்பிட்டுள்ளார்.

13 வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு நாட்டில் நடைபெறும் 3 வது இடைத்தேர்தல் இதுவாகும்.

#TamilSchoolmychoice

கடந்த வருடம் கோலபெசுட் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மொஹ்டார் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் ஜூலை 24 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அஸிஸான் அப்துல் ரசாக்கின் மறைவைத் தொடர்ந்து சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.