Home நாடு அன்வார் காஜாங்கில் போட்டியிடுவது உறுதி!

அன்வார் காஜாங்கில் போட்டியிடுவது உறுதி!

479
0
SHARE
Ad

Selangor-Khalid-Anwar-300x202கோலாலம்பூர், ஜன 28 – காஜாங் சட்டமன்ற தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என்பதை பிகேஆர் கட்சி இன்று உறுதிபடுத்தியுள்ளது.

இன்று பிகேஆர் தலைமையகத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் இதை அறிவித்தார். எனினும் சில காலம் தான் மந்திரி பெசாரின் பணிகளை செய்ய வேண்டி வரும் என்பதையும் காலிட் குறிப்பிட்டார்.

நேற்று அன்வார் இப்ராகிமை சந்தித்த பிறகு, காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சென் நேற்று தனது பதவியை திடீர் ராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து அவரது தொகுதியில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இன்று அந்த கருத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.