Home வணிகம்/தொழில் நுட்பம் 2013- ல் 100 கோடி திறன்பேசிகள் சர்வதேச அளவில் ஏற்றுமதி காணப்பட்டது

2013- ல் 100 கோடி திறன்பேசிகள் சர்வதேச அளவில் ஏற்றுமதி காணப்பட்டது

469
0
SHARE
Ad

Smartphone-Market-Share

கோலாலம்பூர், ஜன 29- கடந்த 2013ம் ஆண்டில் சர்வதேச அளவில் 100 கோடி எண்ணிக்கையிலான திறன்பேசிகளை அத்துறை சார்ந்த நிறவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன  என ஐடிசி(IDC) நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2012ம் ஆண்டில் இருந்ததைவிட இது 38.4% உயர்வாகும். கணக்கிட்டு காலத்தில் நடைபெற்ற திறன்பேசி ஏற்றுமதியில் சாம்சங் ஏற்றுமதியின் பங்களிப்பு 31.3% ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு 18.7%ல் இருந்து 15.3% ஆக குறைந்துள்ளது. மேலும், இதர திறன்பேசிகளான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், லினோவா ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு தலா 5% ஆக உள்ளது என ஐடிசி  நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.