Home உலகம் நோபல் பரிசுக்கு ஸ்னோடென் பெயர் பரிந்துரை

நோபல் பரிசுக்கு ஸ்னோடென் பெயர் பரிந்துரை

471
0
SHARE
Ad

snowden_001

ஆஸ்லோ, ஜன 30-அமெரிக்காவின் உளவுத்துறை ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோர்வே நோபல் பரிசுக் குழுவுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

#TamilSchoolmychoice

“பிற நாடுகளையும் அவற்றின் மக்களையும் அமெரிக்க அரசாங்கம் ரகசியமாகக் கண்காணித்ததை அம்பலப்படுத்தியதில் எட்வர்ட் ஸ்னோடென் பெரும் பங்காற்றியுள்ளார்.

உலகில் என்ன நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய அவரது பங்களிப்பு மக்களிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.

அவரது பங்களிப்பின் அடிப்படை சாராம்சம் அமைதியை வேண்டுவதாக உள்ளது. ஸ்னோடெனின் நடவடிக்கைகள், உலகப் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான புதிய நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு வழி வகுத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, சுவீடன் சமூகவியல் பேராசிரியர் ஸ்டீபன் ஸ்வால்ஃபோர்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்னோடெனின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.