பாக்தாத், ஜூலை 25 – அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலை பாதுகாக்கவே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாகவும், அதனை அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து கூட்டாக உருவாக்கின என்று அமெரிக்காவின் முன்னாள் உளவாளி ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனிநாடாக பிரகடனம் செய்து வருகின்றது. அதன் தலைவராக அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.எ.ஏவுக்கு ஸ்னோடென் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“அமெரிக்க படைகளால் 2004-ம் ஆண்டு தற்போதைய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்துதான் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
அந்த இயக்கம் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் பாதுகாக்கப் படுவதற்குத்தான். இதன் பொருட்டு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலை கூட்டாகச் சேர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கியது” என்று அவர் கூறியுள்ளார்.
அண்மையில் மொசூல் மற்றும் கிர்குக் நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இஸ்ரேல் தயாரிப்பு ஆயுதங்களை பயன்படுத்தியதாக குர்திஷ் இனப் படையினரும் தெரிவித்து இருந்தனர்.
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். கடுப்பாட்டில் உள்ள பகுதியில் இஸ்ரேலிய மருத்துவமனை ஒன்றில்தான் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாடுகளின் சுயலாபத்திற்காக தீவிரவாத இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதும், அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டு இருப்பதும் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.