Home இந்தியா ஜெயலலிதா வருமான வரி வழக்கு: விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா வருமான வரி வழக்கு: விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

543
0
SHARE
Ad

Jayalalitha 300 x 200புதுடில்லி, ஜன 30 – தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் 1994 வரையிலான மூன்றுஆண்டுகள் காலகட்டத்தில், தனது வருமானம் குறித்த கணக்குகளை வருமான வரித் துறைக்குசமர்ப்பிக்கவில்லை என சென்னையில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித்துறையால் வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த இந்திய உச்சமன்றம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது பற்றிய வழக்கை நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தொடுத்திருந்த மேல் முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிமன்றமும் இந்தமேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன்உள்ளிட்டஅமர்வு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று தீர்ப்பளித்து, வழக்கை விசாரித்து வரும் சென்னை நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க உத்தரவிட்டது.

இதே வழக்கில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மீதும் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.