Home நாடு காஜாங் இடைத்தேர்தலில் பிகேஆருக்கு பாஸ் உதவும் – ஹாடி அவாங்

காஜாங் இடைத்தேர்தலில் பிகேஆருக்கு பாஸ் உதவும் – ஹாடி அவாங்

453
0
SHARE
Ad

Datuk-Seri-Abdul-Hadi-Awangபெட்டாலிங் ஜெயா, பிப் 4 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி குறித்து பாஸ் கட்சிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. காஜாங் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான பிகேஆருக்கு உதவி செய்வோம் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

நேற்று நடந்த கட்சியின் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஹாடி அவாங் குறிப்பிட்டார்.

“பக்காத்தானுடன் உள்ள நல்லுறவு காரணமாக இடைத்தேர்தலில் பிகேஆருக்கு பாஸ் உதவும். பாஸ் தேர்தல் இயக்குநராக டாக்டர் ஹாட்டா ராம்லியை நியமித்துள்ளோம். மற்றபடி மந்திரி பெசார் பதவி குறித்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை” என்று இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஸ் கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக பாஸ் இளைஞர் பிரிவு பிகேஆர் கட்சியை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்தது.

சிலாங்கூரின் நடப்பு மந்திரி பெசார் காலிட் இப்ராகிமை விலக்கி அந்த இடத்தில் பிகேஆர் ஆலோசகர் அன்பார் இப்ராகிம் பதவி ஏற்பதற்கே, லீ சின் ராஜினாமா செய்யும் படி கூறப்பட்டார் என்று பாஸ் இளைஞர் பிரிவு குற்றம் சாட்டியது.

இதன் காரணமாக பாஸ் தலைவரான ஹாடி அவாங் இன்று தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறுகையில், “பிகேஆரை புறக்கணிப்போம் என்பது அவர்களது ‘தனிப்பட்ட கருத்து’. அது எந்த வகையிலும் கட்சியின் முடிவை பாதிக்காது. காஜாங் இடைத்தேர்தலை பாஸ் புறக்கணிக்காது” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.