Home நாடு ”மான்செஸ்டர் சட்டை அணிந்தால் நீங்கள் மான்செஸ்டரைச் சேர்ந்தவரா?” – கைரிக்கு அன்வார் பதிலடி

”மான்செஸ்டர் சட்டை அணிந்தால் நீங்கள் மான்செஸ்டரைச் சேர்ந்தவரா?” – கைரிக்கு அன்வார் பதிலடி

494
0
SHARE
Ad

IMG20140201WA0004காஜாங், பிப் 4 –  சிலாங்கூர் கால்பந்து ஜெர்ஸியை (சட்டை) அணிந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதற்காக தன்னை விமர்சித்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு பதிலடி கொடுக்கும் படி எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“புலாவ் பினாங்கிற்கு எதற்காக சிலாங்கூர் ஜெர்ஸியை அணிந்து சென்றேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்கிறார். நிறைய மக்கள் மான்செஸ்டர் ஜெர்ஸிக்களை அணிகின்றனர். அவர்கள் எல்லாம் மான்செஸ்டரை சேர்ந்தவர்களா?” என்று காஜாங்கில் உள்ள தாமான் மெஸ்ரா மண்டபத்தில் பலத்த கைதட்டல்களுக்கிடையே அன்வார் கூறினார்.

கோல கங்சார் உட்பட தான் மலேசியாவில் பல இடங்களில் வாழ்ந்திருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“கமுந்திங்கில் கூட இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளேன்” என்று உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தில் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை அன்வார் சுட்டிக்காட்டினார்.

“சிலாங்கூரிலும் பல வருடங்கள் இருந்துள்ளேன்”  என்றும் அன்வார் தெரிவித்தார்.

மேலும், காஜாங் இடைத்தேர்தலில் தனக்கு எதிராக பூபந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வே போட்டியிடப்போவதாக கூறப்படுவது குறித்து கருத்துரைத்த அன்வார், “ஒருவேளை அவர் போட்டியிடுவதாக இருந்தால் நான் தோல்வியை ஒப்புக்கொள்கின்றேன்….பூப்பந்து விளையாட்டில். நான் அவருடைய விசிறி.. அவருடைய பல போட்டிகளை ஆர்வமுடன் பார்த்திருக்கின்றேன். அவர் வெற்றியடைய வேண்டும் என்று பலமுறை பிரார்த்தனை செய்திருக்கின்றேன். எனவே இடைத்தேர்தலில் என்னுடைய வெற்றிக்காக அவர் பிரார்த்தனை செய்வார்” என்று பலத்த சிரிப்பொலிகளுக்கிடையே அன்வார் கூறினார்.