Home நாடு “இடைத்தேர்தல் தாமதமாவது பிகேஆருக்கு நன்மையே” – ரபிஸி கருத்து

“இடைத்தேர்தல் தாமதமாவது பிகேஆருக்கு நன்மையே” – ரபிஸி கருத்து

606
0
SHARE
Ad

rafisiகோலாலம்பூர், பிப் 6 – காஜாங் இடைத்தேர்தல் தாமதமாவது பிகேஆருக்கு நன்மை தான் என்று அக்கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார்.

மார்ச் 23 ஆம் தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், இன்னும் 44 நாட்களில் நிறைய உழைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முன்னணி தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை கால தாமதப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட ரபிஸி, அதை தாங்கள் நன்மையாக எடுத்துக் கொள்வதாக நேற்று இரவு நடந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரைக் கைப்பற்றிவிடலாம் என்ற தேசிய முன்னணியின் பெரும் திட்டம், காஜாங்கில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவால் குலைந்துவிட்டது என்றும் ரபிஸி கூறினார்.