Home உலகம் சிரியா போரில் 10 ஆயிரம் குழந்தைகள் கொலை!

சிரியா போரில் 10 ஆயிரம் குழந்தைகள் கொலை!

834
0
SHARE
Ad

syria

டமாஸ்கஸ், பிப் 6– சிரியா நாட்டில் 2½ ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படைகள் போராடி வருகின்றன. ராணுவத்துக்கும், புரட்சி படைகளுக்கும் நடந்துள்ள சண்டையில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் தொடர்பாக ஐ.நா. சபை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சிரியா போரில் இதுவரை 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ராணுவம் மற்றும் புரட்சி படைகள் இருதரப்பினருமே குழந்தைகளை கொன்று வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் புரட்சி படையினர் குழந்தைகளை படையில் சேர்த்து போரிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 11 வயது சிறுவன் கூட புரட்சி படையில் வீரனாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு தடியால் அடிப்பது, உடலில் மின்சாரத்தை பாய்ச்சுவது, நகத்தை பிடுங்குவது, கற்பழிப்பது போன்ற சித்ரவதைகளையும் செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.