Home நாடு ம.இ.கா வில் 10 புதிய துணைக்குழுக்கள்!

ம.இ.கா வில் 10 புதிய துணைக்குழுக்கள்!

707
0
SHARE
Ad

Palanivel-and-MIC-300x202கோலாலம்பூர், பிப் 7 – ம.இ.கா வில் அமைக்கப்பட்டுள்ள 10 புதிய துணைக் குழுக்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலை அடுத்து, நேற்று முதல் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் முறைகேடுகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், எந்த ஒரு விவாதமும் இன்றி கூட்டம் அமைதியான வகையில் நிறைவடைந்தது.

அக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பழனிவேல், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 துணைக் குழுக்களுக்கு தலைமை ஏற்பவர்களின் பெயர்களை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதன் விபரம் பின்வருமாறு:-

ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் கல்விக் குழுவிற்கு டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.நிஜார் மற்றும் துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

சேவை மையம் மற்றும் பொதுநலக் குழுவிற்கு செனட்டர் ஏ.சிவபாக்கியமும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக குழுவிற்கு டத்தோ ஆர்.ரகுமூர்த்தியும் தலைமை வகிக்கின்றனர்.

கலாச்சாரக் குழுவிற்கு கே.பி.சாமியும், பசுமை தொழிநுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவிற்கு டத்தோ ஜி.குமார் அம்மானும், கிளை மற்றும் உறுப்பினர் குழுவிற்கு டத்தோ வி.சுப்ரமணியமும் தலைவகிக்கின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு குழுவிற்கு எம்.செல்வகுமார், டத்தோ எஸ்.முருகேசன், டத்தோ சிவா பரஞ்சோதி, டத்தோ ஆர்.கணேசன் மற்றும் எம்.கருப்பண்ணன் ஆகிய 5 பேர் பொறுப்பேற்கின்றனர்.

இதனிடையே, கட்சித் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்ட பழனிவேல், புகார்கள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார்.