Home இந்தியா தேர்தல் பிரச்சாரத்தில்-சிம்ரன்…நமீதா…பல்லவி

தேர்தல் பிரச்சாரத்தில்-சிம்ரன்…நமீதா…பல்லவி

540
0
SHARE
Ad

சென்னை பிப்ர-12 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு நடிகர், நடிகைகள் பட்டாளத்தை களம் இறக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது.தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. சரத்குமாரின் சமக, அதிமுக கூட்டணியில் நீடிக்கிறது. அந்த கட்சியும் தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் தேர்தல் பிரசார வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

அதுபற்றி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தலில் மக்களிடம் அதிமுகவின் சாதனைகளை எவ்வாறு விளக்கி வாக்கு கேட்க வேண்டும் என்றும் அதிமுக முன்னணி பேச்சாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதா தவிர, ஸ்டார் பேச்சாளர்கள் இல்லை.

மதிமுகவில் இருந்து விலகி வந்த நாஞ்சில் சம்பத்தை வைத்தே பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தேர்தல் வரும் நேரத்தில் கூடுதல் பேச்சாளர்களை களம் இறக்க அதிமுக இப்போது வியூகம் அமைத்து  வருகிறது.

அதன்படி நடிகர், நடிகைகள் பட்டாளத்தை களம் இறக்க அதிமுக முடிவு செய்துள்ளது. தற்போது நடிகர்கள் ராமராஜன், குண்டு கல்யாணம், ஜெயகோவிந்தன், சூர்யகாந்த், தியாகு, செந்தில், நடிகைகள் டி.ஆர்.சரஸ்வதி, விந்தியா உள்ளிட்ட சிலர் உள்ளனர்.

அதனால் சினிமாவில் சமீபத்தில் மார்க்கெட் இழந்த அதே நேரம் மக்களுக்கு நல்ல அறிமுகம் ஆன நடிகைகள் சிம்ரன், பல்லவி, நமீதா உள்ளிட்ட சில நடிகைகளை புதிதாக அதிமுக பிரசார அணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போடு கோடம்பாக்கம் வட்டாரத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.