Home கலை உலகம் மலேசியத் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’ – முன்னோட்டம் வெளியீடு!

மலேசியத் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’ – முன்னோட்டம் வெளியீடு!

626
0
SHARE
Ad

1377355_273131152842432_968004978_nகோலாலம்பூர், பிப் 12 – மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மலேசியத் திரைப்படமான ‘வெண்ணிற இரவுகள்’ வரும் மார்ச் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என அதன் இயக்குநர் ஆர்.பிரகாஷ் ராஜாராம் அறிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் விகடகவி மகேந்திரன் கதாநாயகனாகவும் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமி கதாநாயகியாகவும் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சைக்கோ மந்திரா உட்பட பல உள்ளூர் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் நார்வேயில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட விழா மற்றும் சென்னையில் ‘பிலிம் பெஸ்டிவல் ஆப் தமிழ்நாடு இன்டர்நேஷனல்’ திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டு பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு மனோ வி.நாராயணன், இசை லாரன்ஸ் சூசை,  பாடல் வரிகள் யுவாஜி, கோகோ நந்தா, ஷீசை ஆகியோர் எழுதியுள்ளனர். சிவா பெரியண்ணன் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியுள்ளார்.

விரைவில் திரையரங்குகளில் வெற்றி நடைபோடவுள்ள ‘வெண்ணிற இரவுகள்’ படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

– பீனிக்ஸ்தாசன்