Home நாடு காஜாங்கில் பிஎஸ்எம் போட்டியிடாது!

காஜாங்கில் பிஎஸ்எம் போட்டியிடாது!

641
0
SHARE
Ad

logo psmகோலாலம்பூர், பிப் 12 – காஜாங் இடைத்தேர்தலில் பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் டாக்டர் நஸிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் நஸிர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஜாங் சட்டமன்ற உறுப்பினர் காரணமின்றி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது கொள்கையற்றது மற்றும் முறையற்றது. எனவே அந்த தொகுதியில் பிஎஸ்எம் போட்டியிட விரும்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பிஎஸ்எம் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்து, காஜாங் தொகுதியை தேசிய முன்னணி கைப்பற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் நஸிர் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தல் அரசாங்கத்தின் பொதுநிதியை வீணாக்குகிறது என்றும், இது ஒரு ஜனநாயகமற்ற செயல் என்றும் பிஎஸ்எம் கருதுவதாக நஸிர் குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் மார்ச் 23 ஆம் தேதி காஜாங் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.