Home கலை உலகம் ‘வெண்ணிற இரவுகள்’ மிகச் சிறந்த படைப்பு – பிரித்திவிராஜ் பாராட்டு

‘வெண்ணிற இரவுகள்’ மிகச் சிறந்த படைப்பு – பிரித்திவிராஜ் பாராட்டு

673
0
SHARE
Ad

936080_10152191261198277_220355882_nகோலாலம்பூர், மார்ச் 6 – நாடெங்கிலும் இன்று வெளியிடப்படும் மலேசியத் திரைப்படமான ‘வெண்ணிற இரவுகள்’ குறித்து ஏற்கனவே தமிழக திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி இயக்குநர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

அந்த வரிசையில், பிரபல நடிகரான பப்லு பிரித்திவிராஜ், ‘வெண்ணிற இரவுகள்’ குறித்து மனம் நெகிழ்ந்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

சென்னைத் திரைப்பட விழாவில் தான் இந்த படத்தைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும் படியாக இருந்ததாகவும் பிரித்திவிராஜ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இயக்குநர் பிரகாஷ் ராஜாராம் வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளதாகவும், இதில் மகேன் மற்றும் சங்கீதா மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை கதைக்கேற்ற வகையில் பக்கபலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய கலைஞர்கள் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ள இப்படத்தை மக்கள் அனைவரும் கட்டாயம் திரையரங்கிற்கு சென்று பார்த்து தங்களது ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் பிரித்திவிராஜ் கூறினார்.

– பீனிக்ஸ்தாசன்