Home கலை உலகம் திரையரங்குகளில் இன்று முதல் ‘வெண்ணிற இரவுகள்’ வெற்றி நடைபோடுகிறது!

திரையரங்குகளில் இன்று முதல் ‘வெண்ணிற இரவுகள்’ வெற்றி நடைபோடுகிறது!

671
0
SHARE
Ad

1377355_273131152842432_968004978_n-300x2541கோலாலம்பூர், மார்ச் 6 – அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மலேசியத் திரைப்படமான ‘வெண்ணிற இரவுகள்’ இன்று நாடெங்கிலும் 20 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது.

சிங்கப்பூரில் ரெக்ஸ் திரையரங்கிலும் வெளியிடப்படவுள்ளது.

காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் வெளிவருவதற்கு முன்பே, பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் நோர்வே திரைப்பட விழா மற்றும் தமிழ்நாடு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தமிழகத்தின் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி போன்ற பல முக்கிய இயக்குநர்களின் பாராட்டுக்களை குவித்ததுள்ளது.

#TamilSchoolmychoice

பிரகாஷ் ராஜாராம் இயக்கத்தில் விகடகவி மகேன் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமி நடிப்பில், மலேசியா, சிங்கப்பூர், மியன்மார் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகான திரைக்கதை, மனதில் நிற்கும் ‘நச்’ வசனங்கள், நடிப்பில் கலக்கியிருக்கும் கதாப்பாத்திரங்கள், ரம்மியமான ஒளிப்பதிவு, இதயத்தை திருடும் இசை, அதற்கேற்ற அழகான வரிகள் என ‘வெண்ணிற இரவுகள்’ திரைப்படம் உங்களின் மனதைத் தொடுவது நிச்சயம்.

திரையரங்கிற்கு சென்று அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

‘வெண்ணிற இரவுகள்’ படம் குறித்த செல்லியல் விமர்சனத்தைப் படிக்க கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்

http://www.selliyal.com/?p=47027

– பீனிக்ஸ்தாசன்