Home உலகம் மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு! இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை!

மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு! இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை!

788
0
SHARE
Ad

05-1394027714-human-ear2-600லண்டன், மார் 6 – மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளைத் தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் மருத்துவ சாதனைப் புரிந்துள்ளனர். பொதுவாக சிலர் பிறவியிலேயே காது, மூக்கு போன்ற உறுப்புகள் இன்றி பிறக்கின்றனர். மேலும் சிலரோ எதிர்பாராத விதமாக விபத்துகளினால் அத்தகைய உறுப்புகளைப் பறி கொடுக்கின்றனர். அத்தகைய உறுப்பு குறைபாடுள்ளவர்களுக்கு வரமாக செயற்கையாக மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு போன்ற உறுப்புகளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்து மருத்துவர்கள்.

லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்டிரீட் மருத்துவமனை மற்றும் யூ.சி.எல்.இன்ஸ்டியூட் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றி கண்டுள்ளனர். பின்னர் அவற்றை காது மற்றும் மூக்கு போன்ற வடிவங்களாக ஆராய்ச்சிக் கூடத்தில் வளர்த்துள்ளனர். பின்னர் அவற்றுடன் சில ரசாயன கலவைகளை சேர்த்து அவற்றை சவ்வு 05-1394027723-stem-cells-1-600செல்களாக மாற்றியுள்ளனர்.

இறுதியாக செயற்கையாக வளர்க்கப்பட்ட சவ்வுப் பகுதியை தோல் பகுதியில் ஒட்டி காதுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே முறையில் மூக்குகளும் செயற்கையாக ஆய்வுக்கூடம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆய்வின் மூலம் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி மேலும் பல உறுப்புகள் தயாரிக்க இயலும் என கண்டறியப்பட்டுள்னர் இங்கிலாந்து மருத்துவர்கள்.