Home இந்தியா அன்பை பயன்படுத்தி பா.ஜ.க.வை விரட்டியடிப்போம்-ராகுல் காந்தியின் புதிய கோஷம்!

அன்பை பயன்படுத்தி பா.ஜ.க.வை விரட்டியடிப்போம்-ராகுல் காந்தியின் புதிய கோஷம்!

584
0
SHARE
Ad

rahul-gandhi2புதுடில்லி, மார் 6 – வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அன்பை பயன்படுத்தி பா.ஜ.க.வை விரட்டியடிப்போம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி உடன்பாடுகளிலும், தேர்தல் பிரசாரத்திலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறோம்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், நாட்டிலுள்ள அதிகாரம் முழுவதையும் ஒரு தனி மனிதரின் கையில் ஒப்படைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பின்னர் அவுரங்காபாத்திலுள்ள கல்லூரி ஒன்றில், மாணவ, மாணவிகளிடையே ராகுல் பேசினார். அப்போது அவர் பேசுகையில், நான் பிரதமராக வருவேனா இல்லையா என்பது தெரியாது. ஆனால் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர் உணர வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இது நமது நாடு என்பதையே. ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் எப்போதும் உரத்த குரலிலேயே பேசிக்கொண்டிருப்பார்.

#TamilSchoolmychoice

ஏனெனில் அவருக்கு தன்னம்பிக்கை கிடையாது. ஆனால் நமது தேசப்பிதா காந்தியோ உரத்த குரலில் பேசியதே இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் கோபத்துடன் பேசத்தேவையில்லை. அதை அன்புடன் சொல்லலாம். அப்படி சொன்னால் பலர் உங்களுடன் கூட இருப்பார்கள். நமது நாட்டை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு எதிராக நாம் கோபத்தை பயன்படுத்தவில்லை. மாறாக அன்பை பயன்படுத்தியே அவர்களை விரட்டியடித்தோம். அது போல, பா.ஜ.க.வையும் அன்பை பயன்படுத்தி விரட்டியடிப்போம் என ராகுல் காந்தி பேசினார்.