Home கலை உலகம் அஸ்ட்ரோவில் ‘உன் போல் யாரும் இல்லை’ – தீபாவளி சிறப்புத் தொலைக்காட்சி படம்!

அஸ்ட்ரோவில் ‘உன் போல் யாரும் இல்லை’ – தீபாவளி சிறப்புத் தொலைக்காட்சி படம்!

1049
0
SHARE
Ad

Un pol yaarumillaiகோலாலம்பூர், அக்டோபர் 20 – தீபாவளியை முன்னிட்டு இயக்குநர் பிரகாஷ் ராஜாராம் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘உன் போல் யாருமில்லை’ என்ற தொலைக்காட்சி படம் நாளை அக்டோபர் 21, இரவு 10 மணிக்கு அஸ்ட்ரோ வானவில்லில் ஒளிபரப்பாகவுள்ளது.

தந்தையின் தியாகத்தை மதிக்காத பிள்ளைகளின் போக்குகளையும், தந்தையின் மனநிலையையும் பற்றிய கதையை கருவாகக் கொண்ட இந்த படத்தில் மூத்த கலைஞர் அப்பே ஆறுமுகம் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இயக்குநர் சஞ்சய் குமார், தினேஷ் கிருஷ்ணன், நந்தினி கணேசன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

Perakas

(இயக்குநர் பிரகாஷ் ராஜாராம்)

இந்த வருடத்தின் தொடக்கத்தில் பிரகாஷ் இயக்கிய ‘வெண்ணிற இரவுகள்’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியையும், உலக அளவில் மலேசியா தமிழ் திரைப்படங்களின் மீதான நன்மதிப்பையும் பெற்றது.

இயக்குநர் பிரகாஷின் அடுத்த படைப்பாக ‘உன் போல் யாருமில்லை’ இருப்பதால் இந்த தொலைக்காட்சி படத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்பு கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் அக்டோபர் 26-ம் தேதி, இரவு 10 மணிக்கு, அஸ்ட்ரோ வானவில்லில் ‘வெண்ணிற இரவுகள்’ திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது மலேசியா சினிமா ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக அமையவுள்ளது.

– ஃபீனிக்ஸ்தாசன்