Home கலை உலகம் மே 22 முதல் ஆஸ்ட்ரோ முதல்திரையில் ‘வெண்ணிற இரவுகள்’

மே 22 முதல் ஆஸ்ட்ரோ முதல்திரையில் ‘வெண்ணிற இரவுகள்’

756
0
SHARE
Ad

Vennira iravugal

கோலாலம்பூர், மே 22 – பிரபல மலேசிய இயக்குநர் ஆர்.பிரகாஷ் ராஜாராம் இயக்கத்தில் பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் விகடகவி மகேந்திரன் கதாநாயகனாகவும், சங்கீதா கிருஷ்ணசாமி கதாநாயகியாகவும் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘வெண்ணிற இரவுகள்’ திரைப்படம் வரும் மே 22 ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ First முதல்திரையில் வெளியிடப்படவுள்ளது.

மியான்மர் தமிழர்களின் வாழ்கை சூழலை மிக எதார்த்தமான முறையில் காட்டிய இப்படத்தின் வித்தியாசமான திரைக்கதை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி இப்படம் நார்வேயில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட விழா மற்றும் சென்னையில் ‘பிலிம் பெஸ்டிவல் ஆப் தமிழ்நாடு இன்டர்நேஷனல்’ திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டு பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு மனோ வி.நாராயணன், இசை லாரன்ஸ் சூசை,  பாடல் வரிகள் யுவாஜி, கோகோ நந்தா, ஷீசை ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘வல்லினம்’ மலேசிய இலக்கிய இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான சிவா பெரியண்ணன் இப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் சிறப்பம்சமாக பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

ஃபீனிக்ஸ்தாசன்

வெண்ணிற இரவுகள் முன்னோட்டம்:

please install flash