ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடக்கும்போது ஐஸ்வர்யா ராய் தவறாமல் பறக்கும் முத்தம் கொடுப்பார். இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்த ஐஸ்வர்யா அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து முத்தத்தை பறக்கவிட்டார்.
ஐஸ்வர்யா 2006-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் கேன்ஸ் விழாவில் முத்தத்தை பறக்கவிடுகிறார். 2010-ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் கலக்கலான உடையில் கலந்து கொண்ட ஐஸ் வழக்கம் போல் பறக்கும் முத்தம் கொடுத்தார். ஐஸ்வர்யா 2002-ஆம் ஆண்டு முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.