Home கலை உலகம் திட்டமிட்டபடி கோச்சடையான் நாளை வெளியீடு!

திட்டமிட்டபடி கோச்சடையான் நாளை வெளியீடு!

553
0
SHARE
Ad

rajiniinsideகோலாலம்பூர், மே 22 – ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் அனிமேஷன் படமாக கோச்சடையான் நாளை உலகம் முழுவதும் வெளியீட உள்ளனர்.

அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இப்படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மே 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. மலேசியாவில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இதனிடையே மலேசியாவில் விநியோக உரிமையைப் பெற்றுள்ள லோட்டாஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை எந்த மாற்றமும் இல்லாமல் வெளியீடு காண்கிறது.

#TamilSchoolmychoice

உலகம் முழுவதும் விநியோகிப்பதற்கு 6 ஆயிரம் பிரிண்டுகள் போடப்பட்ட கோச்சடையான் படத்தை, பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் திரையரங்கில் முப்பறிமாண (3டி) முறையில் காணலாம் என்று லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் டத்தோ ரெனா துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.