Home நாடு தமிழ்மலர் பத்திரிக்கை மீது டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் வழக்கு

தமிழ்மலர் பத்திரிக்கை மீது டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் வழக்கு

852
0
SHARE
Ad

dato-sri-gurujiகோலாலம்பூர், மே 22 – கடந்த சில மாதங்களாக தமிழ்மலர் நாளிதழ் மற்றும் ஆர்பிடி இயக்கத்தின் தலைவரும் பலரால் ஆன்மீக குருவாக கருதப்படுபவருமான டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய இரு தரப்புக்கும்  இடையில் நடந்து வரும் போராட்டம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

தன்மீதும் தன் இயக்கத்தின் மீதும் வரிசையாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளால் தனது பெயருக்கும் இயக்கத்திற்கும் கலங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறி தமிழ்மலர் நாளிதழுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர்கள் தமிழ்மலர் நிறுவனம் மீது சார்வு செய்துள்ளதாக தமிழ்மலர் நாளிதழ் தனது பதிப்பில் நேற்று முன்தினம் முதல் பக்க செய்தியாக வெளியிட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் அவரது துணைவியார் சுந்தரா குப்பன் மற்றும் அவரது ஆர்பிடி இயக்கம் ஆகியவை வாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டு தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் தமிழ்மலர் வெளியீட்டு நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் எஸ்.எம்.பெரியசாமி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக இம்மாதம் 7ஆம் தேதி டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் மற்றும் அவரது ஆர்பிடி இயக்கத்திற்கு எதிராக தமிழ்மலர் வெளியீட்டு நிறுவனம் ஒரு வழக்கை தொடுத்திருந்தது.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் தரப்பினர் இந்த புதிய வழக்கினை நீதிமன்றத்தில் பதிவுசெய்திருக்கின்றனர் என்று தமிழ்மலர் நிர்வாக இயக்குநர் எஸ்.எம்.பெரியசாமி கூறியதாகவும் தமிழ்மலர் செய்தி வெளியிட்டுள்ளது.