சென்னை, ஜூன் 9 – பல்வேறு தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம், 2டி மற்றும் 3டி படங்களில் வெளியிடப்பட்டது. படம் வெளியாவதற்கு முன்பாகே பல இன்னல்களை சந்தித்து கடந்த மாதம் மே 23-ஆம் தேதி வெளியானது.
உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும் சௌந்தர்யா இயக்கத்திலும் வெளியான முப்பரிமாண படமான (3டி) கோச்சடையான் உலக பட விழாக்களில் திரையிடப்படுகிறது.
ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் வெளியிடப்பட்ட படம் இதுவரை 80 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் 3டி வெளியீட்டுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் தென்னிந்தியாவில் இன்னும் 350 தியேட்டர்களில் ஒடிக் கொண்டிருக்கிறது.
இந்த மாத இறுதியில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் கோச்சடையான் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. இது தவிர ஜப்பான் நாட்டில் விரைவில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட இருக்கிறது.
உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்பட இருக்கிறது. தற்போதய பல்வேறு உலகப் பட விழா அமைப்புகளிடமிருந்து படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்ற கோச்சடையான் படம் முதல் மூன்று நாள் வசூல் ரூ 42 கோடியை (மலேசிய ரிங்கிட் 2,33,34,000) எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் 12 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று சினிமா துறையில் உள்ளவர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.