Home கலை உலகம் ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர்களிடம் ரூ.4 கோடி கேட்கும் விநியோகஸ்தர்கள்!

‘கோச்சடையான்’ தயாரிப்பாளர்களிடம் ரூ.4 கோடி கேட்கும் விநியோகஸ்தர்கள்!

652
0
SHARE
Ad

Kochadaiyaan (1)சென்னை, செப்டம்பர் 23 – ‘கோச்சடையான்’ படம் ரூ 200 கோடியை வசூலித்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இப்போது நஷ்டக் கணக்கைச் சொல்ல ஆரம்பித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

இந்தப் படத்தை வெளியிட்ட பல இடங்களில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம். கடைசியாக பார்த்ததில் ரூ 4 கோடி நஷ்டம் காட்டியதாம் கணக்கு.

உடனே, இதை வசூலிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த விநியோகஸ்தர்கள், முதல் கட்டமாக தயாரிப்பாளர் தரப்புக்கு தகவல் அனுப்பியுள்ளார்களாம்.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் லாப நஷ்டம் எதுவாக இருந்தாலும் தன்னிடம் வரக்கூடாது என ஏற்கெனவே ரஜினி கூறியது நினைவிருக்கலாம். ஆனால் இப்படம் சரியா ஓடவில்லை என்கின்றனர் விநியோகஸ்தர்கள் தரப்பு.

kochadaiyaan,தற்போது ‘கோச்சடையான்’ படத்தின் நஷ்ட கணக்கை சரிசெய்ய வேண்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பு தயாரிப்பாளர்களை அனுகியுள்ளனராம்.