சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள கோச்சடையான் படம் கடந்த 23-ஆம் தேதி , உலகம் முழுவதும் 4000 திரையருங்குகளில் வெளியிடப்பட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பல்வேறு தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம், 2டி மற்றும் 3டி படங்களில் வெளியிடப்பட்டது. கோச்சடையான் திரையிடப்பட்டு இன்றுவரை, மூன்றே நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் இப்படம் 30கோடி வசூலித்துள்ளது.
வெளிநாடுகளில் 12 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
Comments