Home நாடு சரவாக் புதிய முதல்வர் சுயமாக செயல்படுவாரா?

சரவாக் புதிய முதல்வர் சுயமாக செயல்படுவாரா?

536
0
SHARE
Ad

yb-tan-sri-datuk-amar-haji-adenan-bin-haji-satemசரவாக், பிப் 14 – சரவாக் மாநிலத்தில் 33 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த அப்துல் தாயிப் மாஹ்முட், தற்போது அம்மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்கவிருப்பதால், அவருக்குப் பதிலாக அடினான் சாத்தேம் (படம்) முதலமைச்சராக பதவியில் அமர்த்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

தாயிப்பின் சகோதரி தான் அடினானின் முன்னாள் மனைவி என்பதால், தாயிப்புக்கு அடினான் மிக நெருங்கிய உறவினரும் மற்றும் விசுவாசியுமாவார்.

அதே வேளையில், தாயிப்புக்கு அரசியலிலும் நெருங்கிய ஆதரவாளரான அடினான், முதலமைச்சராகப் பதவி ஏற்றால், தாயிப்பின் தலையீடுகள் இன்றி சுயமாக செயல்படுவாரா? என்ற கேள்வியை சரவாக்கை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜெனிரி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியா சரவாக் பல்கலைக்கழகத்தின் (Universiti Malaysia Sarawak – Unimas) ன் அரசியல்  ஆய்வாளரான   டாக்டர்  ஜெனிரி  அமிர் இது குறித்து மேலும் கூறுகையில், தாயிப் ஆளுநராக இருந்தாலும், அடினானின் முதலமைச்சர் பணியில் குறிக்கிடாமல் இருப்பார் என்று சொல்ல முடியாது. மாநிலத் தலைவர்கள் தான் முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், இதற்கு முன் கடந்த 1987 ஆம் ஆண்டு, சரவாக் மாநில ஆளுநராக தாயிப்பின் உறவினர் அப்துல் ரஹ்மான் யாகோப் பதவி வகித்தார். அப்போது தாயிப் அம்மாநில முதல்வராக இருந்தார்.அப்போது இருவருக்குமிடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே அது போன்ற ஒரு மோதல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்று ஜெனிரி குறிப்பிட்டார்.