Home அவசியம் படிக்க வேண்டியவை கோலாலம்பூர் – சிங்கப்பூருக்கான அதிவேக ரயில்!

கோலாலம்பூர் – சிங்கப்பூருக்கான அதிவேக ரயில்!

708
0
SHARE
Ad

hishamuddinசிங்கப்பூர், பிப் 14 – கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கான அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்த அதிக காலம் பிடித்தாலும், அத்திட்டம் தொடரும் என இடைக்கால போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் கூறினார்.

கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் காலத்தில் சிங்கப்பூரை பாதுகாப்பதற்காக உயிர் துறந்த லெப்டிணன்ட் அட்னான் சய்டியின் நினைவு நாள் விழாவில் கலந்து கொண்ட ஹிஷாமுடின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த திட்டம் போக்குவரத்து சம்பந்தப்பட்ட திட்டம் மட்டும் அல்ல. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திட்டம். பொருளாதார திட்டமிடல் பிரிவு இதில் முக்கியப் பங்காற்றுகின்றது. எனவே கடந்த சில வருடங்களாகவே இத்திட்டம் குறித்து இரு நாடுகளும் கலந்தாலோசித்து வருகின்றன. விரைவில் இத்திட்டம் தொடரப்படும்” என்று தெரிவித்தார்.

4,000 கோடி ரிங்கிட் மதிப்புடைய இத்திட்டம் குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியா – சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு 330 கிலோமீட்டர் தொலைவை 90 நிமிடங்களில் அடைந்து விடுவது இந்த அதிவேக ரயில் திட்டத்தின் சிறப்பம்சம்.

இந்த திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டால், மலேசியா – சிங்கப்பூரில் மிகப் பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் ஹிஷாமுடின் கூறினார்.

இந்நிகழ்வில் சிங்கப்பூருக்கான மலேசிய தூதர் டத்தோ ஹுஸ்னி ஜாய் யாக்கோப்பும் கலந்து கொண்டார்.