Home நாடு காஜாங்கில் ஸாயிட் இப்ராகிம் போட்டியிடலாம்!

காஜாங்கில் ஸாயிட் இப்ராகிம் போட்டியிடலாம்!

584
0
SHARE
Ad

Zaid ibrahimபெட்டாலிங் ஜெயா, பிப் 14 – முன்னாள் அம்னோ மற்றும் பிகேஆர் தலைவரான டத்தோ ஸாயிட் இப்ராகிம், காஜாங் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இருப்பதாக இன்று அறிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் சட்டத்துறை அமைச்சராக இருந்த ஸாயிட், கடந்த 2009 ஆம் ஆண்டு பிகேஆர் கட்சிக்கு மாறினார்.

அதன் பின்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிகேஆர் கட்சியில் இருந்தும் விலகி, தனியாக (Parti Kesejahteraan Insan Tanah Air) என்ற சொந்த கட்சியை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் மார்ச் 23 ஆம் தேதி காஜாங் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.