கோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் – சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக இரயில் திட்டத்திற்கான கூட்டு முதலீட்டு நிறுவனத்தின் ஏலத்தை மலேசியாவின் மைஎச்எஸ்ஆர் கூட்டுறவு நிறுவனமும், சிங்கப்பூரின் எஸ்ஜி எச்எஸ்ஆர் நிறுவனமும் இணைந்து இன்று புதன்கிழமை அறிமுகம் செய்தன.
இந்நிறுவனம் அதிவேக இரயில் திட்டத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி மற்றும் பராமரிப்பு, இரயில் முதலீடுகள் மற்றும் இயக்கம் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும் என இரு நிறுவனங்களும் இன்று கூட்டாக அறிவித்தன.
வரும் 2018-ம் ஆண்டில் அந்நிறுவனம் ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு விடும் என்றும் அறிவித்திருக்கின்றன.