Home இந்தியா “சசிகலா-தினகரன் சம்பந்தப்படவில்லை. நானே வெளியிட்டேன்” – வெற்றிவேல்!

“சசிகலா-தினகரன் சம்பந்தப்படவில்லை. நானே வெளியிட்டேன்” – வெற்றிவேல்!

585
0
SHARE
Ad

vetrivel-tamil nadu state assemblyman-சென்னை – பதவி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காணொளியை இன்று புதன்கிழமை வெளியிட்டவருமான வெற்றிவேல், இந்தக் காணொளி விவகாரத்தில் டிடிவி தினகரனுக்கோ, சின்னம்மா சசிகலாவுக்கோ எந்தவித சம்பந்தமுமில்லை என்றும், நடப்பது பொறுக்க முடியாமல் தானே தன்னிச்சையாக அந்தக் காணொளியை வெளியிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இன்றிரவு தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வழி வழங்கிய பேட்டியில் வெற்றிவேல் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, இன்று வெளியிடப்பட்ட காணொளி விவகாரம் தொடர்பில் தனது தியாகராய நகர் இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வெற்றிவேலைக் கடுமையாகச் சாடியிருந்தார்