Home இந்தியா இந்தியத் தேர்தல்: தங்கத் தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் அறைகளில் பறக்கும் படை சோதனை

இந்தியத் தேர்தல்: தங்கத் தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் அறைகளில் பறக்கும் படை சோதனை

900
0
SHARE
Ad

மதுரை – எதிர்வரும் மே 19-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே 18 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான அமமுக பொறுப்பாளராகச் செயல்பட்ட வெற்றிவேல் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரடி சோதனைகள் நடத்தினர்.

அதே வேளையில் மதுரையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் தங்கியிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 12) சோதனை நடத்தினர்.

#TamilSchoolmychoice

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க தமிழ்ச் செல்வன் தங்கியிருந்தார். மக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தங்க தமிழ்ச் செல்வன் அறையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.