Home நாடு இஸ்லாமிய தலைவர்களின் தவறான நடவடிக்கைகள் கவனிக்கப்படுகிறது!- காலிட் சமாட்

இஸ்லாமிய தலைவர்களின் தவறான நடவடிக்கைகள் கவனிக்கப்படுகிறது!- காலிட் சமாட்

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்லாமிய மதம் சார்ந்த தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக இருந்தால், இஸ்லாமிய மதம் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சமாட் கூறினார்.

தலைவர்கள் மத்தியில் தூய தார்மீகத் தன்மை இருந்தால் மட்டுமே நாட்டினை வளப்படுத்த முடியும், ஏனெனில் அவர்கள் மக்களை வடிவமைக்கக்கூடிய இயக்குனர்களாக உள்ளனர் என அவர் கூறினார்.

“இஸ்லாமைப் பற்றி பேசினால் இஸ்லாம் அல்லாத மக்கள் பயப்படுகிறார்கள், இதனாலேயே அவர்கள் அம்மதத்தை வெறுக்கவும் செய்கிறார்கள். இஸ்லாமியத்தைப் பற்றி பேசும் அதே தலைவர் ஊழல், இனவெறி மற்றும் வெறுப்பினை மக்கள் மத்தியில் பரவ விடுவதை மக்கள் பார்க்கிறார்கள்” என அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த நாட்டை நல்ல முறையில் மேம்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் அவர்களிடத்தில் இல்லைஎனவும் அவர் கூறினார்.

ஆகையால், அரசியல் வேற்றுமைகள், இன பாகுபாடுகள் பார்க்காமல் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து கூட்டாக இந்நாட்டினை உருவாக்க பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.