நம்பிக்கை கூட்டணி இப்போது அதன் சொந்த பலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
“அம்னோ முன்பு போல் வலுவாக இல்லை. இப்போது, அவர்கள் வலுவாக இல்லை என்று எங்களுக்குத் தெரிந்த சூழ்நிலையில், நம்பிக்கை கூட்டணியை நான் வலுப்படுத்த வேண்டும். அம்னோவிற்கும் நாம் உதவ தேவையில்லை. நீங்கள் ஏன் அவர்களுக்கு உதவ விரும்புகிறீர்கள்? எனவே, இந்த சூழ்நிலையை நாம் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும், “என்று அவர் நேற்று ஓர் இயங்கலை உரையாடலில் கூறினார்.
நம்பிக்கை கூட்டணிக்கு ஒரு புதிய ஆரம்பம் வேண்டும் என்றும், இதற்கு முன் செயல்படுத்த இயலாத விவகாரங்களை, திட்டங்களை முடிக்க விரும்புவதாக அவர் கூறினார்.