Home One Line P1 தேர்தலுக்குப் பிறகும் பெர்சாத்து- பாஸ் ஒத்துழைப்பு தொடரும்!

தேர்தலுக்குப் பிறகும் பெர்சாத்து- பாஸ் ஒத்துழைப்பு தொடரும்!

448
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கூட்டணியில் பெர்சாத்து மற்றும் பாஸ் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று இரு கட்சிகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை பாஸ் மற்றும் பெர்சாத்து தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் மற்றும் ஹம்சா சைனுடின் ஆகியோர் தெரிவித்தனர்.

15- வது பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு ‘புதிய கூட்டமைப்பை’, குறிப்பாக நம்பிக்கை கூட்டணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் நிராகரிப்பதில் பெர்சாத்து மற்றும் பாஸ் உறுதியாக உள்ளன.

#TamilSchoolmychoice

“பெர்சாத்து மற்றும் பாஸ் எப்போதும் உம்மாவின் ஒற்றுமையையும், ஒட்டுமொத்த பன்மை சமுதாயத்தின் ஒற்றுமையையும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. இந்த கருத்தை ஆதரிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளன.

“அதே நேரத்தில், ஏற்கனவே நிறுவப்பட்ட ஒற்றுமையை அகற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்கவும், ஒன்றாக எழுப்பப்பட்ட தேசிய மூட்டணி அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்கவும்,” என்று அவர்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

மலாய், இஸ்லாம், குறிப்பாக பூமிபுத்ரா மற்றும் மலேசியர்கள் அனைவரையும் நாட்டை ஒன்றிணைக்க ஹம்சா மற்றும் தக்கியுதீன் அழைப்பு விடுத்துள்ளனர்.