Home One Line P1 சாஹிட் ஹமிடி சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை!

சாஹிட் ஹமிடி சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை!

526
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கூறினார்.

பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என தீர்மானித்த பின்னர் அம்னோ அமைச்சர்களை பதவி விலகுமாறு நேற்று சவால் விடுத்த நஸ்ரி, சாஹிட்டின் தலைமை அம்னோவை பலவீனமாகக் காட்டுவதாகக் கூறினார்.

“அம்னோ அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேற விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சி அவர்களுக்கு அறிவுறுத்தினால், அவர்கள் அவ்வாறு செய்வார்கள்,” என்று அவர் எப்எம்டிக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆண்டு பொதுப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு கட்சி முடிவு என்பதை அம்னோ உறுப்பினர்கள் மற்றும் அடிமட்ட மக்கள் தெளிவாக புரிந்து கொண்டதாக நஸ்ரி வாதிட்டார்.

“அவர்கள் பதவி விலக வேண்டும் என்பது வெளிப்படையானது. ஆனால் அவ்வாறு செய்யுமாறு கூற தலைவருக்கு தலைமை இல்லை. அவர்களிடம் சொன்னால், அவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்று அவர் கவலைப்படுகிறாரா? ,” என்று அவர் கூறினார்.